நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி, பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் அவருக்கு அனுப்பிய கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் எழுதிய அந்தக் கடிதத்தில், அன்புள்ள கொட்டாச்சி அவர்களுக்கு… அனைவரையும் பெயர் மற்றும் திறமைகளைச் சொல்லி தனித்தனியே அறிமுகப்படுத்தும் நேரமும் வாய்ப்பும் விழா மேடையில் அமையவில்லை.அதைச் செய்யும் களமாக படப்பிடிப்பு களம் அமையும் என உறுதி கூறுகிறேன். விழாவிற்கும் வந்து மேடையை அழகுபடுத்தியதற்கு நன்றி.”என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை தற்போது பகிர்ந்துள்ள கொட்டாச்சி, தனது பதிவில், “இந்தக் கடிதத்தை என் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் மறக்க முடியாது. ‘விருமாண்டி’ படத்தின் பங்க்ஷன் ஒரு மேடையில் நடந்தது. அப்போது கமல் சார் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் அந்த மேடையில் எந்த நடிகரையும் தனித்தனியாக அறிமுகப்படுத்தவில்லை.
எல்லோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தோம். அன்றைய நிகழ்ச்சி முடிந்து மறுநாள் என் வீட்டுக்கு வந்த முதல் கடிதம் இதுவே! நான் நடிகனாகி என் வீடு தேடி வந்த முதல் கடிதம். இது என்னை மிகவும் பெருமைப்படுத்தியது. காலத்துக்கும் மறக்க முடியாத நினைவுகளை இப்போது உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.