Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் பிளடி பெக்கர் படக்குழு… என்னனு தெரியுமா? #BLOODY BEGGAR

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார், தனது முதல் தயாரிப்பில் இறங்கியுள்ளார் பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம். அவரது முதல் தயாரிப்பான படம் ‘பிளடி பெக்கர்’.

இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். நெல்சனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் இந்த படத்தை இயக்குகிறார். இசையமைப்பை ஜென் மார்ட்டின் கவனிக்கிறார். கவினுடன் இணைந்து அக்ஷயா, ஜெயிலர் புகழ் தன்ராஜ், அனார்கலி நாசர், ரெட்டின் கிங்ஸ்லி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகவிருக்கிறது. மேலும், இந்த படத்தின் டீசர் அக்டோபர் 7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News