திவ்யா பாரதி என்ற மாடல் அழகி 1992ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். தனது கல்லூரிக் காலத்தில் இருந்து தான் நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தினால் மாடலிங் துறையைத் தேர்வு செய்து அதில் தனது கவனத்தை செலுத்தினார்.
மாடலிங் துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்த திவ்யா பாரதி, தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 2021ஆம் ஆண்டு வெளியான ‘பேச்சிலர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இவர், தனது நடிப்பால் பிரபலமானார்.
திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதுடன், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுகிறார். இதன் மூலம், அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, அவர் 3.6 மில்லியன் இன்ஸ்டாகிராம் பாலோவர்களை கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் கிளாமரான உடையில் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.