வரும் மார்ச் 27ம் தேதி பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்று எம்புரான் படம் வெளியாவதை தொடர்ந்து அன்றைய தினம் தங்களது கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது. அது மட்டுமல்ல கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என காலை 7 மணிக்கு பெங்களூருவில் ராஜேஸ்வரி நகரில் உள்ள ஒய்ஜிஆர் மாலில் மூவி டைம் சினிமாஸ் திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிட்டு காட்டுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்லூரி நிர்வாகமே வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் கல்லூரியின் எம்டி மோகன்லாலின் தீவிர ரசிகராம். அதையும் குறிப்பிட்டு, அதனால் எம்புரான் படத்தை கொண்டாடுவோம் என்று சொல்லியே இந்த அறிவிப்பை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
