Friday, January 24, 2025

ரேஸ்-க்கு முன் அஜித் சார் என்னிடம் சொன்ன அந்த விஷயம்… நெகிழ்ச்சியோடு பகிர்ந்த இயக்குனர் மகிழ் திருமேனி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராகப் விளங்கி வருபவர் அஜித். தற்போது அவர் நடித்து முடித்துள்ள படம் “விடாமுயற்சி”. இப்படம் வரும் மாதம் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

“விடாமுயற்சி”க்கு அடுத்ததாக, அஜித் “குட் பேட் அக்லி” என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அஜித் தனது நடிப்பில் மட்டுமல்லாமல் கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் வல்லவர் என்பதை அனைவரும் அறிந்ததே. சமீபத்தில், அஜித் கார் ரேசிங் அணியை தொடங்கியுள்ளார். இந்த அணி துபாயில் நடைபெற்ற கார் ரேசில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து பெருமை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ரேஸில் பங்கேற்கப்போவதை அஜித் சார் முன்கூட்டியே சொல்லிவிட்டார். ரேஸில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால்தான் என்னை நம்பி பணம் மற்றும் உழைப்பை முதலீடு செய்த அனைவருக்கும் இரு படங்களையும் முடித்து தர வேண்டும் என நினைத்தேன்.

ரேஸில் நான் செல்லும்போது 100% ஆக்ஸலரேட்டரை அழுத்த வேண்டும். ஆனால், ‘என்னிடம் படங்கள், கமிட்மெண்ட் இருக்கின்றன’ என்று நினைத்து 90% மட்டும் அழுத்தினால், அது உண்மையான ரேசராக நான் இல்லை என்பதை காட்டும். எனவே, எனது முழுத்திறனை பயன்படுத்தவேண்டும்” என்றார்.இந்த வார்த்தைகளை நினைத்தாலும் எனக்கு இப்போது வரை சிலிர்ப்பாக இருக்கிறது. இதை நான் வாழ்நாளிலும் மறக்கமாட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

- Advertisement -

Read more

Local News