துபாயில் நடைபெற்ற ’24H’ கார் ரேஸில் ஒரு பிரிவில் நடிகர் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றது. அதுமட்டுமின்றி ஸ்ப்ரிட் ஆஃப் தி கேம் என்ற விருதும் பெற்றது. இதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது போர்ச்சுக்கலில் நடக்கவுள்ள மற்றொரு ரேஸ் போட்டியில் அஜித் தனது அணியினருடன் பங்கேற்க சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே துபாய் கார் ரேஸ் நிறைவுக்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அஜித் அளித்த பேட்டி, தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறுகையில், ”சென்னையில் இரவு நேர கார் பந்தயத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி அவர்கள் நடத்தியது வரவேற்கத்தக்கது அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இது நமது நாட்டில் கார் பந்தயங்களுக்கு அது மிகவும் உந்துசக்தியாக அமைந்தது. மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனக்கு அளித்த ஆதரவுக்கும் நன்றி” எனக் கூறினார்.