Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியவனுக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி பாலா சார் – அருண் விஜய் எமோஷனல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வணங்கான்’. இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.

அதற்கான முக்கிய காரணமாக, பாலா இயக்கத்தில் உருவான பிதா மகன் படத்தில் விக்ரமின் இடத்தில் அருண் விஜய் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இயக்குநர் மிஷ்கின் முக்கியமான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து உயிரூட்டியுள்ளார். ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது.

இந்த படத்தின் ட்ரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், அருண் விஜய் தனது குடும்பத்துடன் இணைந்து இந்த படத்தை பார்த்துள்ளார். படம் தொடர்பான தனது உணர்ச்சியை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.🙏🏻🙏🏻எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும்திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏🏻மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்…உங்கள் அருண் விஜய் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News