Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

வெற்றிகரமாக த.வெ.க மாநாட்டை முடித்த தளபதி விஜய்… அடுத்தது என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜயின் தவெக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக முடிவடைந்தது. இதில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர் என்று கூறப்படுகிறது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

தளபதி 69 படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 5ம் தேதி இந்தப் படத்தின் பூஜை நடந்தது, சென்னையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு திட்டமிடப்பட்ட இந்த படப்பிடிப்பு நான்கு நாட்களிலேயே இயக்குனர் ஹெச் வினோத் நிறைவு செய்தார். இதற்குப் பிறகு விஜய் தனது கட்சி மாநாட்டின் காரணமாக தளபதி 69 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தள்ளி வைத்தார்.

அனிருத் இசையில் உருவாகும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் அம்சம் கொண்ட கதைக்களத்துடன் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியானால், அது விஜயின் அரசியல் பயணத்திற்கு, மற்றும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தளபதி 69 படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் வடிவமைக்கப்படுவதாக எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News