செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித் குமார், தமிழில் மாஸ்டர், லியோ, கோப்ரா, மகான் போன்ற படங்களை தயாரித்தவர். சமீபகாலமாக தனது மகன் அக்ஷய் குமாரை கதாநாயகனாக உருவாக்கும் முயற்சியில் லலித் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தற்போது வெற்றிமாறனின் உதவி இயக்குநர் சுரேஷ் இந்த படத்தை இயக்குகிறார். ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இப்படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.
இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சசிகுமார் மற்றும் விக்ரம் பிரபு ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதான தகவல் இன்னும் உறுதியாகவில்லை.