மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரின் தாராவி பகுதியில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு சக்தி விநாயகர் கோயிலின் 20ம் ஆண்டு பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு அங்குள்ள மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, “தாராவியில் இவ்வளவு மக்கள் இருப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு சொந்த ஊரில் இருப்பது போலவே மகிழ்ச்சியாக இருக்கிறது.சக்தி விநாயகர் கோயிலின் 20ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், எனக்கு வாழ்வு அளித்தது தமிழகம் தான்” என உருக்கமாக பேசினார்.