Thursday, October 31, 2024

அமரன் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய தமிழக முதல்வர்… #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அமரன்’ படத்தின் சிறப்பு திரையிடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ள ‘அமரன்’ படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார், இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனி நிறுவனம், கமல் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தை பல மொழிகளில் வெளியிடுவதால், படக்குழுவினர் பல இடங்களில் விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‘அமரன்’ படத்தின் சிறப்பு திரையிடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருடன் பார்த்தார். இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடனிருந்தனர். படத்தைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் படக்குழுவினரையும் மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசையையும் பாராட்டியதாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News