Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின்… ஏன் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையின் ராஜாவாக இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிலையில் வருகிற மார்ச் 8ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்ற உள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தி, அவருக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இளையராஜாவை சந்தித்த வீடியோவை பகிர்ந்து, ‛‛இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது… ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா நன்றி : முதல்வர் ஸ்டாலின், தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!” என இளையராஜா வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News