Monday, October 28, 2024

பிங்க் நிற உடையில் ரசிகர்கள் மனதை பின்னி எடுத்த தம்மன்னா… ட்ரெண்ட் ஹாட் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமன்னா தமிழில் அயன், ஜெயிலர், அரண்மனை போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலயா பாடலில் அவர் ஆடிய நடனம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

சமூக வலைதளங்களில் பல பிரபலங்களும் அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து தமன்னா நடித்த அரண்மனை 4 படத்தில் நாயகியாக நடித்து வந்தார். இப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலில் அதிக வெற்றிபெற்றது. தற்போது இந்தி திரையுலகில் பல படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் தமன்னா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற படத்தில் நடித்தபோது தனது இணை நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் ஏற்பட்டது.

தமன்னா மற்றும் விஜய் வர்மா காதலர்களாக பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வருகின்றனர், அவர்களின் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. அடிக்கடி விழாக்கள் மற்றும் விருந்துகளில் இணைந்து கலந்து கொள்கின்ற விஜய் வர்மா, தமன்னா மும்பையில் நடந்த தீபாவளி விருந்தில் ஜோடியாக கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News