கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படமாக ‘ரெட்ரோ’ உருவாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மே 1ஆம் தேதி இப்படம் வெளியாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158564.jpg)
இன்று (பிப்ரவரி 13) இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘கண்ணாடி பூவே’ வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியிருக்கிறார், மேலும், சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் அவரே பாடியுள்ளார்.
சிறையில் இருக்கும் சூர்யா, தனது காதலியை நினைத்து பாடும் ஒரு இனிமையான காட்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியான சில மணி நேரங்களுக்குள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.