Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கங்குவா படத்தில் பிற மொழிகளுக்கு ஏ.ஐ பயன்படுத்தி சூர்யாவின் குரலில் டப்பிங்! #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், சூர்யாவுடன் திஷா பதானி மற்றும் பாபி டியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றுகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகிவுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 அன்று வெளியாகிறது, அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் எக்ஸ் வலைத்தளத்தில் நடைபெற்ற ‘ஸ்பேஸ்’ நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம், சைனீஸ் மற்றும் ஜப்பானிஷ் என பல மொழிகளில் வெளியாகிறது என்று தெரிவித்தார். மேலும், இதில் தமிழை தவிர மற்ற மொழிகளுக்கு சூர்யாவின் குரல்-ஐ ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டப்பிங் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News