Friday, January 3, 2025

அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் சூர்யா 45 படக்குழு… வெளியான புது அப்டேட்! #SURIYA45

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 45” என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 20 வருடங்களுக்குப் பிறகு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடிக்கவுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதேசமயம், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் தொடக்கப்பணிகள் கோயம்புத்தூரில் பூஜையுடன் துவங்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் 20ம் தேதி நீதிமன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்தின் தொடர்பான மேலும் பல தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News