‘வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் உள்ளிட்ட பலமொழி நடிகர்களும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடும் திட்டம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது. தற்போது, இந்த படத்தின் வெளியீட்டு தேதியைப் பற்றிய அறிவிப்பை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 14ம் தேதி இந்தப் படத்தை ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளனர்.