சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி தனது 44வது ஆண்டு திருமண நாளை தனது மனைவியுடன் கொண்டாடினார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள் இவரது திருமண நாளுக்காக கோவில்களில் சிறப்பு வழிபாடு எல்லாம் நடத்தினார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் தனது திருமண நாளை தனது மனைவி லதாவுடன் துபாயில் கொண்டாடியுள்ளார்.
