Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சூப்பர் ஸ்டார் பட தலைப்பு‌… லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு… உருவாகிறது புது மிஸ்டர் பாரத்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஜி ஸ்குவாட் என்ற தனது சொந்த நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளார். அதன் முதல் படமாக, “பென்ஸ்” என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். இதன் பிறகு, ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படத்தை பற்றியும் அறிவித்துள்ளார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜுடன் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், யூ-டியூப் மூலம் பிரபலமான பாரத் மற்றும் “கட்சி சேர” பாடலில் நடனமாடி புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு “மிஸ்டர் பாரத்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை காமெடி கலந்த ஒரு முன்னோட்ட வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். அதில், லோகேஷ் கனகராஜும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

1986ஆம் ஆண்டு, ஏவிஎம் நிறுவனத்தால் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் உருவாகி, ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா உள்ளிட்டோர் நடித்த “மிஸ்டர் பாரத்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அதே பெயரை கொண்டு லோகேஷ் கனகராஜ் இந்த புதிய படத்தை தயாரிக்கிறார். இது மட்டும் அல்லாமல், ரஜினிகாந்தை மையமாகக் கொண்டு “கூலி” என்ற புதிய படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News