பிரபாஸ் தற்போது ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘பௌஜி’ ஆகிய திரைப்படங்களின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதைத் தவிர, அவரிடம் இன்னும் பல முக்கியமான திரைப்படங்கள் கைவசம் உள்ளன. அவற்றில், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவிருக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படமும் ஒன்று.
இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஸ்பிரிட்’ படக்குழு ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரபாஸ் “சின்ன வயதில் இருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு” என்று கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் விபேக் ஓபராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

