சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடித்துள்ள படம் குபேரா. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள குபேரா படம் நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ள சென்சார் போர்டு, 19 இடங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வசனங்கள் இருப்பதாக சொல்லி கட் கொடுத்துள்ளது. அதையடுத்து குபேரா படம் 3 மணி நேரம் 03 நிமிடங்கள் ரன்னிங் டைம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
