ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள SK23 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு சிங்கநடை என்று பெயர் இப்படத்துக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படையப்பா படத்தின் ஓபனிங் சாங்கில் வரும் முதல் வார்த்தையே இதுதான். சிவாவின் படத்துக்கு சிங்கநடை டைட்டில் என்ற தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், அட ரஜினியின் தீவிரமான ரசிகர் என்பதை சிவகார்த்திகேயன் மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
