சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக பராசக்தி உருவாகி வருகிறது. இதில் ரவிமோகன் வில்லனாகவும், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.

பராசக்தி படம் 2026 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை தினத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொங்கலுக்கு வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் வெளியாகி ஒருவாரம் கழித்து சிவகார்த்திகேயன் படம் திரைக்கு வருகிறது. இதே சமயம், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு இந்த பொங்கல் போட்டியில் கலந்து கொள்ளுமா என்பது இனிதான் தெரியவரும்.