இயக்குனர் சுதா கொங்கரா தற்போது பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1965 ஆம் ஆண்டின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையை ஜி.வி. பிரகாஷ் அமைக்கிறார்.
சிதம்பரம், மதுரை, இலங்கை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையின் பூந்தமல்லி பகுதியில் அமைக்கப்பட்ட சிறப்பு அரங்கில் நடைபெற்று வருகிறது. முழுப் படப்பிடிப்பையும் வரும் தீபாவளிக்குள் நிறைவு செய்ய படக்குழு தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.