பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தனது 23வது திரைப்படமான ‘மதராஸி’யில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார்.

தமிழில் இப்படத்திற்கு ‘மதராஸி’ என்றும், இந்தியில் ‘தில் மதராஸி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
படக்குழு இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 15 முதல் 20 நாட்கள் வரை நடைபெறும் படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளார். ஆக்ஷன் அம்சங்கள் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது.