Touring Talkies
100% Cinema

Thursday, August 28, 2025

Touring Talkies

கேரளாவில் சிறந்த பிறமொழி திரைப்பட விருதைப் பெற்ற சிவகார்த்திகேயனின் ‘அமரன்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்தார்.

இப்படத்திற்கு பல்வேறு உயரிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சர்வதேச அளவிலும் ‘அமரன்’ அங்கீகாரம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் ‘அமரன்’ தேர்வாகியுள்ளது. மேலும், இந்த ஆண்டிற்கான டாப் 10 ஊக்கமளிக்கும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அமரன்’ இடம்பிடித்துள்ளது.

இதற்கிடையில், கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கம் வழங்கிய விருது விழாவில் ‘அமரன்’ சிறந்த பிறமொழித் திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, கேரள அமைச்சர் வாசவனிடம் இருந்து சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்திற்கான அந்த விருதை பெற்றுக்கொண்டார்.

- Advertisement -

Read more

Local News