Touring Talkies
100% Cinema

Wednesday, June 25, 2025

Touring Talkies

‘குட் நைட்’ பட இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசளித்து மகிழ்ந்த சிவகார்த்திகேயன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குட் நைட்” படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பரிசொன்று வழங்கியுள்ளார். இயக்குநரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன், அதே நேரத்தில் சிறப்பான பரிசையும் அளித்துள்ளார். இந்த நிகழ்வுக்கான புகைப்படங்களை பகிர்ந்த இயக்குநர், “வாழ்த்துகள் மற்றும் அழகான பரிசுக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா. இந்த வருட பிறந்த நாளை மிகவும் சிறப்பாக்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சிவகார்த்திகேயனின் 24-வது திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படம் தந்தை-மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தந்தை கதாபாத்திரத்திற்காக பிரபல நடிகர் மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News