“கனா” திரைப்படத்திற்கு பிறகு, 2019 ஆம் ஆண்டு வெளியான “தும்பா” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் தர்ஷன்.

அதற்குப் பிறகு, இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் “ஹவுஸ் மேட்ஸ்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தர்ஷன். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
தற்போது, “ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி, படத்தின் ப்ரிவ்யூ காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் பார்த்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் பெருமளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கதையில், கதாநாயகன் ஒரு வீடு வாங்குகிறார். ஆனால், அந்த வீட்டில் பல அதிசயமான, அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இப்படம் ஒரு காமெடி ஹாரர் வகையைச் சேர்ந்தது.