Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவரான பாடகி சைந்தவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் இருவரும் மனமாய்வு அடைந்த நிலையில், விவாகரத்து பெற்றுவிட்டதாக அறிக்கை வெளியிட்டு உறுதியான முடிவை எடுத்துள்ளனர். தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சைந்தவியின் புதிய வீடியோ ஒன்றை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. சைந்தவி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சரிகமப லிட்டில் சாம்ஸ் 4’ என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார்.

இந்த இசை நிகழ்ச்சியை, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்க, ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா மற்றும் எஸ்பிபி சரண் ஆகியோர் நிரந்தர நடுவர்களாக உள்ளனர். கடந்த வாரம் முதல் இந்நிகழ்ச்சியின் மெகா ஆடிஷன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்த கட்டத்துக்கு சிறப்பு நடுவராக வைக்கம் விஜயலட்சுமி பங்கேற்க உள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியை ஜீ5 ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News