நடிகர் விஜய் தனது 69வது படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலமாக விஜய் சினிமாவிலிருந்து விலகி, அரசியலுக்கு மாற உள்ளதால், இதுவே அவரது கடைசி படம் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது, மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.
இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரைன், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று (அக்.,4) இப்படத்தின் பூஜை விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, நடிகர்கள் பாபி தியோல், நரைன் மற்றும் இயக்குனர் எச்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே நாளில், இன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் யாகம் நடைபெற, புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மாநாட்டிற்காக பந்தல் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.