‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற விஜய் டிவி சீரியலில் டீனேஜ் வயதில் நடிப்பைத் தொடங்கியவர் ஷிவானி நாராயணன். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்தார். சீரியல்களில் ஹோம்லியாக நடித்ததோடு, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களும் டான்ஸ் வீடியோக்களும் பகிர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்களை ஈர்த்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன் பின் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார். அதே சமயம், ‘பம்பர்’ எனும் படத்தில் நாயகியாக நடித்திருந்தாலும், அந்த படம் திரையரங்குகளில் அதிக வரவேற்பை பெறவில்லை.
தற்போது ஷிவானி நாராயணன், மாடர்ன் உடையில் எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் விரைவாக வைரலாகி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும், லைக்களையும் பெற்றுவருகின்றன.