மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் நிறைவு பெற்றது. அதற்குப் பிறகு டப்பிங் பணிகளையும் அஜித் முழுமையாக முடித்துவிட்டார்.
இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தபோது, அனிரூத் இசையில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடலை இன்று டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அனிரூத் இசையில் ‛சவடீகா’ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலின் வரிகளை அறிவு எழுத, பாடலை ஆண்டனி தாசன் மற்றும் அனிரூத் பாடியுள்ளனர். பாடல் துள்ளலான வரிகளில் உருவாகி ரசிகர்களை ஈர்க்கிறது. இதற்கான நடனங்களை கல்யாண் மாஸ்டர் அமைத்துள்ளார்.