Tuesday, December 31, 2024

விடாமுயற்சி ரிலீஸ் குறித்து உலாவும் வதந்திகள்… பொங்கல் ரிலீஸ்-ல் உறுதியாகவுள்ள படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி’. இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள்.

ஆனால், கடந்த சில வாரங்களாக இப்படத்தின் வெளியீடு குறித்து சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். படம் பொங்கலுக்கு வெளிவராது, இன்னும் வேலைகள் முடியவில்லை, ஹாலிவுட் பட ரீமேக் உரிமையில் சர்ச்சை ஆகியவைதான் காரணம் என்று சொல்லி வருகிறார்கள்.

ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். படத்திற்கு சென்சார் செய்வதற்குக் கூட விண்ணப்பித்துவிட்டார்களாம். ‘விடாமுயற்சி’ படம் திட்டமிட்டபடி வெளியாகாது என பரவும் வதந்தி உண்மையல்ல எனவும் அறிவித்தபடி பொங்கலுக்கு நிச்சயம் விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News