Monday, November 18, 2024

முதல் முறையாக ஹாரர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா… எப்போது ரிலீஸ் தெரியுமா? #THAMA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் வெளியாகிய ஹாரர் படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அதிகளவிலான வசூலை அடைந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்து வெளிவந்த “ஷைத்தான்” படம் வெற்றியடைந்தது. அதன் பிறகு, கடந்த ஜூன் மாதத்தில் வெளியான ஹாரர் திரைப்படமான “முஞ்யா” வெற்றிப்படமாக மாறியது. சமீபத்தில் வெளிவந்த “ஸ்ட்ரீ 2” படமும் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்தது.

இதற்கிடையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஹாரர் வகை படங்களுக்கு திரும்பி இருக்கிறார். அவர் நடிக்கும் முதல் ஹாரர் படத்தை “ஸ்ட்ரீ”, “ஸ்ட்ரீ 2”, “முஞ்யா” போன்ற ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு “தாமா” என பெயரிடப்பட்டுள்ளது. “முஞ்யா” படத்தை இயக்கிய ஆதித்யா சர்போத்தர் இப்படத்தையும் இயக்குகிறார், மேலும் ஆயுஷ்மான் கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் “புஷ்பா 2”, விக்கி கவுஷலுடன் “சாவா”, சல்மான் கானுடன் “சிக்கந்தர்”, மற்றும் தனுஷுடன் “குபேரா” போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

Read more

Local News