Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சமுத்திரக்கனி நடித்துள்ள ராமம் ராகவம்… வெளியான ரிலீஸ் தேதி அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையில் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கிய சமுத்திரக்கனி, அதன்பிறகு நாடோடிகள் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, சமுத்திரக்கனி பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அவரை தொடர்ந்து, அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்துவருகிறார்.

இப்போதெல்லாம், தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களில் ஒருவராக சமுத்திரக்கனி வளர்ந்து வருகிறார். சமீபத்தில், ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் ‘திரு. மாணிக்கம்’ மற்றும் ‘ராஜா கிளி’ திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இந்நிலையில், தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் ‘ராமம் ராகவம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் அப்பா மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News