சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராவ் ரமேஷ், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுசுயா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படம் 21 நாட்களில் மொத்தமாக ரூ. 1700 கோடி வசூலை தாண்டியதாக புஷ்பா படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அளவுக்கு, ராஷ்மிகா மந்தனாவின் ஃபீலிங்ஸ் பாடல் மற்றும் அல்லு அர்ஜுனின் கங்கம்மா ருத்ர தாண்டவம் போன்ற காட்சிகளை பார்ப்பதற்காக தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமாக குவிந்து வருகின்றனர். 21 நாட்களில், புஷ்பா 2 படத்தின் மொத்த வசூல் ரூ. 1705 கோடியை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.