இந்தியத் திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதலிடத்தை ‘டங்கல்’ படம் பிடித்துள்ளது, இரண்டாவது இடத்தில் ‘பாகுபலி 2’ உள்ளது. மூன்றாவது இடத்தை ‘புஷ்பா 2’ பிடித்துள்ளது. ‘புஷ்பா 2’ மூன்றாவது இடத்தை பிடித்ததன் விளைவாக, ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ படங்கள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
‘புஷ்பா 2’ திரைப்படம் 11 நாட்களில் 1409 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ‘ஆர்ஆர்ஆர்’ படம் 1350 கோடியுடன் நான்காவது இடத்திலும், ‘கேஜிஎப் 2’ 1250 கோடியுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூல் 1800 கோடியைத் தாண்டியது. ‘புஷ்பா 2’ திரைப்படம் அந்த வசூலை முறியடிக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.