2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா, 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

பின்னர், 2018ஆம் ஆண்டு பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறி, தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடித்து முடித்துள்ள ஹாலிவுட் படம் ‘ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்’. இதில் ஜான் சீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஜூலை 2ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது. இதற்கிடையில், பிரியங்கா சோப்ரா எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.