பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். இதில், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டிராகன் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு காதல் பாட்டும் பாடியுள்ளார். அப்பாட்டை சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாடல் எழுதுவது குறித்து டிராகன் பட விழாவில் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். நான் பாட்டு எழுத காரணம் சிம்பு தான், அவர் கொடுத்த ஊக்கம் தான் என்னை பாட்டு எழுத வைத்தது. நல்ல நண்பனாகவும் இருக்கிறார் என விக்னேஷ் தெரிவித்தார்.


சீறும் டிராகன்: லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தற்போது டிராகன் படத்தின் வெற்றியை LIK படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒன்றை பதிவிட்டுள்ளார். டிராகன் படத்தின் வெற்றியை கொண்டாடும் நேரத்திற்காக காத்திருந்தோம்.


பிரதீப் ரங்கநாதன் இந்த வெற்றிக்கு தகுதியானவர் தான். பிரதீப் மேலும் பல உயரங்களை தொட வேண்டும். சொல்லி வைத்த மாதிரி சீறும் டிராகன். பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும், வசூல் சாதனை செய்து கொண்டிருக்கும் டிராகன் வெற்றியை LIK படக்குழுவினருடன் கொண்டாடினோம். பிரதீப் பயர் ஆன பர்ஃபாமென்ஸை கொடுத்துள்ளார். மக்களுக்கு பிடித்த படமாகவும் மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.