Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிரபாஸ்-ன் ஸ்பிரிட் படத்தில் இணைந்த பாலிவுட் ஜோடி… அவர்கள் யார் என்று தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா. இவரது படங்கள் சமூக வலைதளங்களில் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தும், ஆனால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வசூலில் சாதனைகள் படைக்கும் தன்மை கொண்டவை.

அனிமல் படத்திற்குப் பிறகு, தற்போது சந்தீப் வங்கா நடிகர் பிரபாஸுடன் ஸ்பிரிட்எனும் புதிய கதையை எழுதி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போதைய தகவலின்படி, பாலிவுட் நடிகர்கள் சயிப் அலிகான் மற்றும் கரீனா கபூர் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சயிப் அலிகானுக்கு, தற்போது மேலும் ஒரு தெலுங்குப் படம் கிடைத்துள்ளது. இதில் நடிகை த்ரிஷாவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தேவரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சந்தீப் வங்கா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News