Saturday, January 11, 2025

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவின் தூதராக நியமிக்கப்பட்டார் பிரபல நடிகர் கிஷோர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கர்நாடக மாநில திரைப்பட அகாடமி ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வரிசையில், 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வருகிற மார்ச் 1 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா மார்ச் 1ஆம் தேதி நடைபெற, நிறைவு விழா மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழா பெங்களூருவில் முழு எட்டு நாட்களும் நடைபெறும்.

இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 13 திரையரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும், திரைப்படத் துறையின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் பிற முக்கிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த விழாவின் தூதராக நடிகர் கிஷோரை கர்நாடக அரசு நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News