இந்திய சினிமாவில் பிரபலமான நடிகரான ஆசிஷ் வித்யார்த்தி, தமிழில் ‘கில்லி, குருவி, உத்தமப்புத்திரன், தில், கஜினி’ போன்ற திரைப்படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

சமீபத்தில் ஆசிஷ் வித்யார்த்தி அளித்த ஒரு பேட்டியில், விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், நான் எப்படி எதையும் அதிகம் யோசிக்காமல், எனக்கு பிடித்தவற்றைச் செய்து வருகிறேனோ, அதேபோல விஜய்யும் தனது மனதிற்கு பிடித்தவற்றைச் செய்து வருகிறார். அது அரசியல் என்று இருப்பதால் தான் இதைப் பற்றி கேள்வி கேட்கிறோம் என்று கூறினார்.
வேறு எதையாவது செய்தால் இப்படி கேள்வி எழுப்பியிருக்க மாட்டோம். நாளை யாராவது நான் ஒரு யோகா மையம் திறக்கப் போகிறேன் என்று சொன்னால், அதைப் பற்றி நாம் எதுவும் கூற மாட்டோம். விஜய் தனது மனதிற்கு பிடித்ததைச் செய்கிறார். அந்த எண்ணத்தை நாம் பாராட்டலாம் என்று அவர் தெரிவித்தார்.