திரு.ஆகாஷ் பாஸ்கரன், ‘டான் பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, ‘இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49’ ஆகிய மிகப்பெரிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதில் அதர்வாவை கதாநாயகனாக வைத்து ‘இதயம் முரளி’ எனும் படத்தையும் இயக்கி வருகிறார்.
சமீபத்தில், ஆகாஷ் பாஸ்கரன் ஒரு பேட்டியில், பராசக்தி’ ஒரு பீரியட் படமாக உருவாகி வருகிறது. ஆனாலும், அது தற்போதைய காலத்திற்கும் பொருந்தும் கதையாக உருவாகி வருகிறது. இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் மணிரத்னம் ஸ்கூலில் பயிற்சி பெற்றவர் என்பதால், படப்பிடிப்பை மிகவும் வேகமாக நடத்துகிறார். சிவாவின் கடின உழைப்பு நம்மை வியக்க வைத்தது. மேலும், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படம் உருவாகும் வாய்ப்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை!” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.