தமிழ் திரையுலகில் “அழகிய தீயே” படத்தின் மூலம் அறிமுகமான நவ்யா நாயர், தொடர்ந்து “சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி,” “பாசக்கிளிகள்,” “மாயக்கண்ணாடி,” “ராமன் தேடிய சீதை” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதோடு மலையாளத்தில் பல வெற்றி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
தற்போது, “தனக்கு இரவில் பேய் கனவுகள் வந்து தூக்கத்தை கெடுக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நவ்யா நாயர் கூறியதாவது: “நான் சிறுவயதிலிருந்தே பயமுறுத்தும் மோசமான பேய் கனவுகளை கண்டுவருகிறேன். இவை எனது நிம்மதியான தூக்கத்தை பாதிக்கின்றன. சில நேரங்களில் கனவில் திடுக்கிட்டு எழுந்துவிடுவேன். மீண்டும் தூங்க முயற்சித்தாலும் அதே கனவுகள் வரும்.
சில சமயங்களில் நள்ளிரவு 2 மணிக்கே கனவில் இருந்து எழுந்துவிடுவேன். அதன் பிறகு மீண்டும் தூங்க பயமாக இருக்கும். பொதுவாக என் கனவுகளில் நான் பாறைகளும் மணலும் சூழ்ந்த ஒரு கற்பனை உலகத்தில் சிக்கி இருப்பேன். சுற்றி கருப்பு நிறத்தில் ஒரு விசித்திரமான உயிரினம் இருக்கும். அதன் வாயை திறந்தவுடன் முக்கோண பற்கள் தெரியும். அது ஒரு பேயைப் போலவே இருக்கும். அதை கனவில் கண்டவுடன் மிகவும் பயந்து போவேன்,” என்றார் நவ்யா நாயர்.