Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நீங்க என்னை எந்தப் பதவிக்கு தூக்கி அடிச்சாலும் நான் அதே போலீஸ்காரன் தான்… அதிரடி ஆக்‌ஷனாக வெளியான வேட்டையன் டிரைலர்! #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “வேட்டையன்”. இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்த வாரம், அக்., 10ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. இதற்கு முன்பே, படத்தின் இரு பாடல்களும், முன்னோட்ட வீடியோவும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்நிலையில் இன்று அக்டோபர் 2 மாலை 5 மணிக்கு டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் பல ஊர்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி நடைபெறும் போராட்டங்களைக் காட்சிப்படுத்தி தொடங்குகிறது. அதில், குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்ற கோஷம் ஒலிக்கிறது. இதனால், காவல் துறைக்கு பிரச்னை வர, அதற்குக் காரணமானவரை என்கவுன்டர் செய்யும் பொறுப்பு ரஜினிக்கு வரும். இந்த பின்னணியில் நிகழும் சம்பவங்களைக் கூறுகிறது இந்த டிரைலர்.

2.39 நிமிடங்கள் ஓடக்கூடிய டிரைலர், ரஜினியின் அமைதியான, ஆனால் ஹீரோயிசம் கலந்த புத்திசாலித்தனமான போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை நன்கு விளக்குகிறது. அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில் போன்ற மற்ற முக்கிய கதாபாத்திரங்களும் டிரைலரில் காட்சியளிக்கின்றனர்.

தேவையில்லை, ஒருவாரம் ரொம்ப அதிகம், மூணே நாளில் டிபார்ட்மென்ட்டிற்கு நல்ல பெயர் வரும். குற்றங்கள் தொற்று நோயைப் போல, அதை வளர விடக் கூடாது. அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியாக இருப்பதை விட, அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்ல. நீங்க என்னை எந்தப் பதவிக்கு தூக்கி அடிச்சாலும் நான் அதே போலீஸ்காரன் தான். என்கிட்ட இருந்து அவனை யாராலும் காப்பாத்த முடியாது” என்ற ரஜினியின் பஞ்ச் வசனங்களும், அவரின் அலட்டல் இல்லாத ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

- Advertisement -

Read more

Local News