‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான ரம்யா பாண்டியன், ‘பிக்பாஸ்’ மற்றும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிகளின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து சமூக ஊடகங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், யோகா கற்றுக் கொடுத்த மாஸ்டர் லோவல் தவான் என்பவருடன் காதல் மலர்ந்த ரம்யா, பெற்றோரின் ஒப்புதலுடன் நவம்பர் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன் கணவருடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது நடிகர் சூரிக்கு கோவிலுக்கு வந்திருந்தார். ரம்யா தனது கணவரை சூரிக்கு அறிமுகம் செய்து வைத்து, அவரிடம் வாழ்த்து பெற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.