தற்போது ‛டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1969′ போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அதற்குப் பிறகு மலையாளத்தில் ‛டியர் ஸ்டூடண்ட்’ மற்றும் தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் ‛மூக்குத்தி அம்மன்-2′ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


மேலும், தனது மகன்களான உயிர் மற்றும் உலக்குடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடும் நயன்தாரா, தற்போது “மை ஹார்ட்” என்ற கேப்ஷனுடன் தனது மகனுக்கு அன்பு முத்தம் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இந்த புகைப்படங்கள் வழக்கத்தைவிட அதிகமான லைக்ஸ்களை பெற்றுவருகிறது. இதோடு, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எந்தளவுக்கு சினிமாவில் பிஸியாக இருக்கிறார்களோ அதே அளவுக்கு தங்களது குழந்தைகளுடன் பிசியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.