தமிழர்களின் பெருமைமிகு திருநாளான பொங்கல் பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளான நேற்று மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.
அந்த வகையில், நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளார். குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
அந்த பதிவில் நயன்தாரா, “உங்கள் வீட்டில் புன்னகை பொங்கட்டும், உங்கள் மனதில் இனிமை பொங்கட்டும், நண்பர்கள் குழு மகிழ்ச்சி பொங்கட்டும்! தமிழர்களின் பெருமை தைப் பொங்கல் நன்றியுடன் கொண்டாடுவோம். நம்மை வாழவைக்கும் விவசாயிகளுக்கும் தமிழுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்