நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, டாம் சாக்கோ உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த, அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தசரா.
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா, மீண்டும் நானியுடன் இணைந்து, அவரது 33வது திரைப்படமான தி பாரடைஸ் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது.தசரா படத்தைப் போல், தி பாரடைஸ் படத்திலும் நானி வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக அனிருத் தெறிக்கவிட்டுள்ளார்.
இந்த படத்தில், நானி இதுவரை காணப்படாத புதிய தோற்றத்தில் இருப்பதை காணலாம். இரண்டு மூக்குத்தியுடன், இரட்டை பின்னிய ஜடையுடன், ஒரு கூட்டத்தின் தலைவராக அவர் காட்டப்படுகிறார். திரைப்படத்தில் சொனாலி குல்கர்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே. விஷ்ணு, படத்தொகுப்பை நவீன் நூலி மேற்கொள்கின்றனர். தி பாரடைஸ் திரைப்படம் 2026ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.