Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

சிரஞ்சீவியை நேரில் சந்தித்து, விருதை பெற அழைப்பு விடுத்த நாகர்ஜூனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரைப்பட உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஏ. நாகேஸ்வரராவ். தமிழில் ‘தேவதாஸ், மாதர் குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி, மஞ்சள் மகிமை, கல்யாணப் பரிசு’ போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் அவர் மறைந்தார்.

அக்கினேனி சர்வதேச அறக்கட்டளையின் சார்பில் 2006ஆம் ஆண்டிலிருந்து ‘ஏஎன்ஆர் தேசிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. தேவ் ஆனந்த், ஷபனா ஆஸ்மி, அஞ்சலி தேவி, ஜெயசுதா, வைஜெயந்தி மாலா, லதா மங்கேஷ்கர், கே பாலசந்தர், ஹேமமாலினி, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன், குடிபூடி ஸ்ரீஹரி, எஸ்எஸ் ராஜமவுலி, ஸ்ரீதேவி, ரேகா ஆகியோர் அந்த விருதை பெற்றவர்கள். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அந்த விருது, இந்த ஆண்டில் நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் நடிகர் அமிதாப் பச்சன் அதை சிரஞ்சீவிக்கு வழங்க உள்ளார்.

அப்பா ஏ. நாகேஸ்வரராவின் மகனும் நடிகருமான நாகார்ஜூனா, சிரஞ்சீவியை நேரில் சந்தித்து, விருதை பெற அழைப்பு விடுத்துள்ளார். “இந்த ஆண்டு எனது அப்பாவின் 100வது பிறந்தநாளை கொண்டாடுவதால் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ஏஎன்ஆர் விருதுகள் 2024க்காக நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரை அழைப்பதில் பெருமை அடைகிறேன். இந்த விருது விழாவை மறக்க முடியாத ஒன்றாக உருவாக்க விரும்புகிறேன்,” என நாகார்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News